அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பலபல தத்துவம் (திருவெண்ணெய்நல்லூர்) முருகா! யோக நிலையில் பொருந்தி இருந்து , சிவஞானத்தைப் பெற்று , சிவமயமாகி , ஒளி உடம்பு பெற்று , சிவானந்தக் கடலில் திளைத்து இருக்க அருள்வாய். தனதன தத்தன தனதன தத்தன தனதன தத்தன தனதன தத்தன தனதன தத்தன தனதன தத்தன ...... தனதான பலபல தத்துவ மதனையெ ரித்திருள் பரையர ணப்படர் வடவன லுக்கிரை படநட நச்சுடர் பெருவெளி யிற்கொள ...... விடமேவிப் பவனமொ ழித்திரு வழியைய டைத்தொரு பருதிவ ழிப்பட விடல்கக னத்தொடு பவுரிகொ ளச்சிவ மயமென முற்றிய ...... பரமூடே கலகலெ னக்கழல் பரிபுர பொற்பத வொலிமலி யத்திரு நடனமி யற்றிய கனகச பைக்குளி லுருகிநி றைக்கட ...... லதில்மூழ்கிக் கவுரிமி னற்சடை யரனொடு நித்தமொ டனகச கத்துவம் ...