செஞ்சி கோட்டை பகுதியில் இருக்கும் மலைகளுக்கு சதுர்க்கம் என்ற பெயர் 18ஆம் நூற்றாண்டில் வந்தவையே
ஔரங்கசீப்பின் திருவத்திமலை கல்வெட்டு ----------------------------------------------- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள சிதிலமடைந்த கோட்டையில் 18ம் நுற்றாண்டில் எழுதப்பட்ட ஔரங்கசீப் காலத்திய தெலுங்கு மொழியிலான கல்வெட்டு அண்ணமங்கலம் கிராமத்திலுள்ள மலையின் உச்சியில் சுமார் 1,000 அடி உயரத்தில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டுள்ள கருங்கல் கோட்டைச் சுவற்றை ஒட்டிய பாறையில் தெலுங்கு எழுத்துக்களைக் கொண்டு பன்னிரெண்டு வரிகளில் கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் எழுத்தமைப்பும், அரசரின் பெயரையும் கொண்டு கல்வெட்டு வரிச் செய்திகள் சுமார் கி.பி.18ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கொள்ளலாம். கல்வெட்டு வரிகள்: ஸ்ரீ ராம வ .ர்தமான வைபவ நாம ஸம்வட்சர -பால்குன சுத்த 1 யாலு ம ஹா ராஜ ராஜ ஸ்ரீ ஆலம் கீரு பாதுஷா வாரி கார்ய தக்ஷுலையின ம ஹா ராஜ ராஜ ஸ்ரீ வேலு கோட்டி பங்கா ரு யாச்சம் நாயனி வாரு அம் ண்ண மங்கல துர்கம் (நூதநம்க திரு பனி வட்டி) துர்கம் அனி பேரு பெட்டெம் சேனு விப்பெட்டா சென்ன ரெட்டி காரினி தனெம் உ-சினபுடு சென்னா ரெட்டி காரு கட்டிம்சின-கோட்ட மகாலு. இதன் பொருள்...