சாத்தனார் - ஐயனார் எனும் சாக்கிய பறையர்
. சாத்தன்', அல்லது 'சாத்தனார்' என்னும் பெயர் 'சேரநாட்டைஆண்ட ஆதன் சேந்தன் எனும் முற்கால சோர்களின் திரிபு பெயர்களாகும் . 'சாத்தன்' என்பது புத்தருக்குரியபெயர்களுள் ஒன்று என்பது ' நிகண்டுகளால் அறியப்படுகிறது மேலும் சாத்தன் என்பதன் வேரு சொல்லே சாக்கியன். எனவே, 'மலைகளின் அரசனான சிவனே' முதல் சித்தனாகவும் புத்தனாகவும் அரியபடுகிறார் என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டுவந்தது. இந்தப் பெயரைப் புத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச் சூட்டினர். பண்டைக் காலத்தில், அதாவது கடைச்சங்க காலத்தில், தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் 'சாத்தன்' என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களினின்றும் தெரியவருகின்றது. பௌத்த நூலாகிய 'மணிமேகலை'யை இயற்றியவர் புத்த மதத்தினர் என்பதும், அவரது பெயர் 'சாத்தனார்' என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது. கோவலன் என்னும் 'சிலப்பதிகார'க் கதைத் தலைவனுடைய தந்தை 'மாசாத்துவன்' என்னும் புத்தன் என்பதும், கோவலன் கொலையுண்டபின், மாசாத்துவன் புத்த ப...