பழனி முருகனுக்கு எழுதப்பட்ட சிவகுலத்தோர் செப்பேடு.
Today பழனி முருகனுக்கு எழுதப்பட்ட பறையர் சமூகச் செப்பேடு. ------------------------------- அமெரிக்காவில் கிடைத்தது. ------------------------------- பழனிமலை முருகனின் காலசந்திப் பூசைக்காக பறையர் சமூகத்தால் எழுதப்பட்ட செப்பேடு ஒன்று அமெரிக்க அருங்காட்சியகத்தில் கிடைத்துள்ளது.இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது: பழங்காலத்தில் பழனிமலை முருகனுக்கு காலசந்திப் பூசை, திருமஞ்சனக் கட்டளைக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு எழுதப்பட்ட பல சமூகத்தினரின் செப்பேடுகள் நிறைய கிடைத்து வருகின்றன. அந்த வகையில் பறையர் சமூகத்தால் எழுதப்பட்ட செப்புப்பட்டயம் ஒன்று கிடைத்துள்ளது.இந்தப்பட்டயம் அமெரிக்க நாட்டின் மெட்ரோபாலிடன் அருங்காட்சியகம்- நியூயார்க்கில் ஆசியப் பிரிவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது .அதில் தமிழ்மொழியில் எழுதப்பட்ட இப்பட்டயத்தின் செய்தி, மேல்விபரம் தெரியவில்லை என்றும் இப்பட்டயம் திருமதி W.J.கால்கன் (W.J COLHOUN) என்பவரிடம் இருந்து வாங்கப்பட்டதாகவும் குறிப்பு உள்ளது. இச்செப்பேட்டை ஆராய்ந்ததில் 24 கொங்குநாடுகளைச் சேர்ந்த ப...