இந்தி எதிர்ப்பு முதல் களபலி போராளி நடராசன்
இந்தி எதிர்ப்பு முதல் களபலியாளரும், இதன் வரலாற்றை திரித்த திமுக கருணாநிதியும்,ஸ்டாலினும்.. சென்னை ஜார்ஜ் டவுன்,போர்த்துகீசு தெருவைச் சேர்ந்த இலட்சுமணன், குப்பம்மாள் என்கிற பறையர் இன பெற்றோருக்குப் பிறந்தவர் நடராசன். அன்றைய சென்னை மாகாணத்தில், இராஜாஜி பள்ளிகளில் இந்தியை கட்டாய பாடமாக ஆக்கியதை எதிர்த்து,1937இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது தமிழகத்தில் கொதித்தெழுந்த தமிழ் பற்றாளர்கள் வரிசையில் பறையர் சமுகத்தை சேர்ந்த நடராசனும் ஒருவர்.திசம்பர் 5,1938 அன்று, சென்னை சௌகார்பேட்டையில் இருந்த இந்து தியாலஜிகல் உயர்நிலைப்பள்ளி முன்பு இந்தி திணிப்புக்கு எதிராக நடந்த மறியலில் கலந்துகொண்டு பலரில் ஒருவராக கைது செய்யபட்டார். நடராசன் உள்ளிட்டோருக்கு ஏழரை மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்தபோது ஏற்பட்ட வயிற்றுவலிகாரணமாக திசம்பர் 30 அன்று சென்னை அரசு மருத்துவமனையில் நடராசன் சேர்க்கப்பட...