Posts

Showing posts from October, 2023

கவரிக்குளம்_கந்தன்_குமரன்

Image
#கவரிக்குளம்_கந்தன்_குமரன்! கேரளாவில் பரை குடி பெரும்பான்மையாக வாழும் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா வட்டம் இவரது பூர்வீகம் ... 1911 ம் ஆண்டு பூர்வகுடி பரையர்கள் தங்கள் உரிமைகளை பாதுகாக்க, பெற, "பிரம்ம பிரத்யக்ஷ சாதுஜன பரிபாலன  பறையர் சங்கம்" என்ற அமைப்பை நிறுவியவர்! இதன் மூலம் மக்களின் நன்மதிப்பை பெற்று இந்திய வரலாற்றில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சட்டமன்றமான திருவிதாங்கூர் பாப்புலர் அசெம்பிளி..யின் சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார்! பெரும்பாட்டன் #அய்யன்_காளிக்கு  பிறகு நீண்ட காலங்கள் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டவர்! பூர்வகுடி மக்களுக்கான நிலம்,கல்வி,அரசு வேலைகளை, உறுதிபடுத்துவது இவரது சங்கத்தின் பிரதான குறிக்கோள் ஆகும். அந்த சிந்தனைகள் சட்டமன்றத்திலும் எதிரொலித்தது ... ஏழை மாணவர்களுக்கு மதிய உணவும், கொகுப்பூதியமும் வழங்க வேண்டும் என்று முதன்முதலில் கோரிக்கை வைத்தவர் கந்தன் குமரன்! அதோடு நிறுத்தாமல் தன் சொந்த முயற்சியால் மக்களை திரட்டி பல்வேறு தாலூக்காவில் பாடசாலைகளை பூர்வகுடி மற்றும் ஏழை மாணவர்களுக்காக நிறுவினார் ! இதுகுறித்து  22 பிப்ரவரி 1917 அன்று பிராஜாசபாவில...