கவரிக்குளம்_கந்தன்_குமரன்
#கவரிக்குளம்_கந்தன்_குமரன்! கேரளாவில்
பரை குடி பெரும்பான்மையாக வாழும் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா வட்டம்
இவரது பூர்வீகம் ... 1911 ம் ஆண்டு பூர்வகுடி
பரையர்கள் தங்கள் உரிமைகளை பாதுகாக்க, பெற, "பிரம்ம பிரத்யக்ஷ சாதுஜன பரிபாலன
பறையர் சங்கம்" என்ற அமைப்பை நிறுவியவர்! இதன் மூலம் மக்களின் நன்மதிப்பை பெற்று இந்திய வரலாற்றில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சட்டமன்றமான திருவிதாங்கூர் பாப்புலர் அசெம்பிளி..யின் சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார்! பெரும்பாட்டன் #அய்யன்_காளிக்கு
பிறகு நீண்ட காலங்கள் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டவர்!
பூர்வகுடி மக்களுக்கான நிலம்,கல்வி,அரசு
வேலைகளை, உறுதிபடுத்துவது இவரது சங்கத்தின் பிரதான குறிக்கோள் ஆகும்.
அந்த சிந்தனைகள் சட்டமன்றத்திலும் எதிரொலித்தது ... ஏழை மாணவர்களுக்கு மதிய உணவும், கொகுப்பூதியமும் வழங்க
வேண்டும் என்று முதன்முதலில் கோரிக்கை
வைத்தவர் கந்தன் குமரன்! அதோடு நிறுத்தாமல் தன் சொந்த முயற்சியால்
மக்களை திரட்டி பல்வேறு தாலூக்காவில்
பாடசாலைகளை பூர்வகுடி மற்றும் ஏழை மாணவர்களுக்காக நிறுவினார் ! இதுகுறித்து 22 பிப்ரவரி 1917 அன்று பிராஜாசபாவில் அவர் ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க உரை இன்றளவும் தனித்த இடம்பெற்றுள்ளது ... " எனது சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளை அரசுப்பள்ளிகளில்
சேர்ப்பதை உயர்சாதியினர் எதிர்க்கின்றனர்,
கல்விக் குறியீடு தடை செய்யவில்லை என்றாலும் எனது சமூகம் குன்னத்தூர், மாவேலிக்கரை, திருவல்லா, அம்பலப்புழா, சங்கனாச்சேரி மற்றும் பீருமேடு தாலுகாக்களில் 52 பள்ளிகளை
சொந்தமாக நடத்திக் கொண்டு வருகிறது" என்று சிறப்புரை ஆற்றினார் ...
இந்த உரையின் பிரதிபலிப்பாக, 1911 ஆம்
ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்
0.05% இருந்த பரையர் சமூகத்தின் கல்வியறிவு விகிதம் 1931 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 23% ஆக
உயர்ந்துள்ளது!! இது அவரது உயரிய சிந்தனைக்கும், செயலுக்குமான எடுத்துக்காட்டு ! மேலும் பரையரின மக்களை ஒன்றுதிரட்டி சாம்பவர் என அழைக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு
கோரிக்கை வைத்தவரும் இவரே! திருப்புமுனை வாய்ந்த கேரள மறுமலர்ச்சி வரலாற்றில்
இவருக்கென சிறப்பு இடம் உண்டு!
ஐயாவின் பிறந்தநாள் 25 அக்டோபர் 1863!
பெருமிதத்துடன் நினைவு கொள்வோம்

Comments