வெள்ளச்சியம்மா பற நாச்சியார்
13 நூற்றாண்டில் கெட்டி முதலி என்ற சிற்றரசர் இருந்தார் இவர் ஆண்ட தாரமங்கலம் அருகே அமரகுந்தியில் கோட்டை இருக்கிறது.
இவர் திருச்செங்கோட்டில் நிலத்தாம ரை எனப்படும் கைலாசநாதர் கோவிலை கட்டினார்.அக்கோவிலுக்கு முன் பெரிய கல்தூணை நிறுவ முயன்றார் ஆனால் யாராலும் தூக்கி நிறுத்த முடியவில்லை.அன்றிரவு கெட்டி முதலி சிற்றரசரின் கனவில் ஒரு பத்தினிப் பெண் தொட்டால் தான் கல்தூணை தூக்கி நிறுத்த முடியும் என கனவில் வந்தது.இதை கெட்டி முதலி நாடு முழுவதும் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது.ஆனால் எந்த பெண்களும் வர தயங்கினர். அந்த சமயம் நம் பரையர் சமூகத்தை சேர்ந்த வெள்ளச்சி நான் தூக்குகிறேன் என முன்வந்தார் ஊரே பயந்து வியப்புடன் பார்த்தது வெள்ளச்சியம்மா அந்த கல்தூணை தொட்டு தூக்கி நிறுத்தினார்.உடனே கெட்டி முதலி வெள்ளச்சிம்மாவுக்கு நிலங்கள் காணிக்கையாக அளித்தார்.அந்த இடத்தில் ஒரு சிறு பகுதியில் வெள்ளச்சியம்மா பெயரில் மண்டபம் கட்டப்பட்டது.
புராணக் கதையில் வருகிற கற்புக்கரசி கண்ணகியை மதுரை மக்கள் வருடந்தோறும் வழிபடுகின்றனர்.
ஆனால், உண்மையாக நடந்துள்ள பத்தினி பெண்ணான நமது இனப் பெண் வெள்ளச்சியம்மாளின் வரலாறு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.ஆகவே நமது இனத்தில் உதித்த கற்புக்கரசி வெள்ளச்சியம்மாவை நினைவு கூர்ந்து வழிப்படுவோம் அவரது வரலாற்றை நம் மக்களிடையே பரப்புங்கள்

Comments