இந்தி எதிர்ப்பு முதல் களபலி போராளி நடராசன்

இந்தி எதிர்ப்பு முதல் களபலியாளரும், இதன் வரலாற்றை திரித்த திமுக கருணாநிதியும்,ஸ்டாலினும்..

                                                  


சென்னை ஜார்ஜ் டவுன்,போர்த்துகீசு தெருவைச் சேர்ந்த இலட்சுமணன், குப்பம்மாள் என்கிற பறையர் இன பெற்றோருக்குப் பிறந்தவர் நடராசன்.   அன்றைய சென்னை மாகாணத்தில், இராஜாஜி பள்ளிகளில் இந்தியை கட்டாய பாடமாக ஆக்கியதை எதிர்த்து,1937இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது தமிழகத்தில் கொதித்தெழுந்த தமிழ் பற்றாளர்கள் வரிசையில் பறையர் சமுகத்தை சேர்ந்த நடராசனும் ஒருவர்.திசம்பர் 5,1938 அன்று, சென்னை சௌகார்பேட்டையில் இருந்த இந்து தியாலஜிகல் உயர்நிலைப்பள்ளி முன்பு இந்தி திணிப்புக்கு எதிராக நடந்த மறியலில் கலந்துகொண்டு பலரில் ஒருவராக கைது செய்யபட்டார்.


நடராசன் உள்ளிட்டோருக்கு ஏழரை மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.


சிறையில் இருந்தபோது ஏற்பட்ட வயிற்றுவலிகாரணமாக திசம்பர் 30 அன்று சென்னை அரசு மருத்துவமனையில் நடராசன் சேர்க்கப்பட்டார்.பிறகு அன்றைய அரசு  நடராசனுக்கு ஒரு கட்டளையை வலியுறுத்தியது.அதாவது  மன்னிப்புக் கடிதத்தை அளித்தால் விடுதலைசெய்வதாக அரசு தரப்பு கூறியபோது அதற்கு நடராசன் மறுத்துவிட்டார்.


மருத்துவமனையில் உடல் நிலை மோசமாகி,தண்டனைக்கைதியாகவே 1939 சனவரி 15 இல் காலமானார் நடராசன்.இந்திமொழி எதிப்புக்காக சிறை சென்று உடல் நிலை மோசமான சூழ்நிலையில் உயிரிழந்தவர்களில் இவரே முதலாவதாக ஆவார்.

அன்றைய காலகட்டத்தில் இந்த இழப்பு அனைவருக்கும் ஒரு எழுச்சியையும்,ஒருபுரம் மன உருக்கத்தையும் ஏற்படுத்தியது.                                         

 இந்த மரணமே போராட்டத்தை மேலும் வலிமையாக்கியது.இவரது உடல் சென்னை மூலக்கொத்தளம் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.


இதேபோன்று போராட்டகளத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் வயிற்றுவலியுடன் மருத்துவமனையில் சேர்க்கபட்டு இரண்டாவதாக 11மார்ச் மாதம் 1939ல் மரணமடைந்தவர் தாளமுத்து என்பவர் இவர் நாடார் சமுதாயத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.   

இந்த இரண்டு இழப்பிற்க்கு அண்ணா அவர்கள் ஆவேசமான உரைகளும் மனவேதனையும் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

இவர்கள் விதைக்கபட்ட இடத்தில் 1960 முன்பு எந்த பெயர் மாற்றமோ எவையும் இல்லை  அதாவது நடராசன்-தாளமுத்து என்றே இருந்தது நினைவு கல்வெட்டில்

 இதன் பிறகே திராவிடம்+தமிழ்தேசிய சாதிபற்று மூலம் இந்த வரலாறுகள் திரிபமாக்கபட்டுள்ளது.என்பது அன்று அண்ணா பெரியார் பேசிய சாதி ஒழிப்பு அரசியலை முழுதும் சீர்க்குலைக்கும் போக்காகும்.


இந்த வரலாற்று திரிபத்திற்க்கு கருணாநிதிக்கு முழு பங்கு உள்ளது என்பது 1987 ல் கருணாநிதி எழுதிய கதை,வசனம்,நியாய தராசு என்கின்ற  திரைபடத்தில் நிழல் ரவி கதாநாயகனாக நடித்த படத்தை காண்டால் நிறுபனமாகும்.

நியாய தராசு படத்தில் கருணாநிதி நிழல் ரவியை தாளமுத்து என்ற எழுத்தாளனாகவும் இந்த படத்தில் இன்னோருவர் தாளமுத்து என்ற பெயருக்கு என்ன அர்த்தம் யார் பெயர் என்று கேட்பது போல் ஒரு காட்சி வரும் அந்த படத்தில் நிழல்ரவி(தாளமுத்து)கூறுவார். இப்பெயர் தமிழகத்தில் முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீர்த்த போராளியின் பெயர் அதை எங்கப்ப எனக்கு வைத்துள்ளார்,என்று நியாய தராசு படத்தில் ஒரு காட்சி வரும்.


 அன்றைக்கு இந்தி எதிர்ப்பில் முதல் உயிர்நீர்த்தவர் நடராசன் தான் என்று அனைத்து திராவிட,தமிழ்வாதிகளும் அறிந்த ஒன்று ஆனால் ஏன் கருணாநிதி படத்தில் இப்படி வரலாற்றை திரிப்பதற்க்கு காரணம்.

ஏன்.? கருணாநிதி இதை காட்டினார் இப்போக்கு திராவிடத்தின் உள்ள சாதிவெறியை காட்டுகிறதா அல்ல கலைஞரின் சாதிவெறியை காட்டுகிறதா.?

  


1993 ல் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது இவர்களுக்கு நினைவிடம் கட்ட அடிக்கல் நாட்டபட்டது.பிறகு 2000 த்தில் கலைஞர் ஆட்சியின் போது இவ்நினைவிடம் கலைஞரால் திறந்துவைக்கபட்டது.அப்போதும் கல்வெட்டில்,தாளமுத்து நடராசன் நினைவிடம் என்று பொறிக்கபட்டது. 

இதை அன்று சில ஊடகங்கள் கேட்டார்கள்.நடராசன் தானே முதல் உயிர்த்தியாகம் செய்தார் அப்போ எப்படி இப்படி எழுதியுள்ளீர்கள் என்று அதற்க்கு கலைஞர்  கூறுகிறார். அகரவரிசையில் தா என்ற எழுத்து முதலில் வரும் பிறகு தான் ந வரும் என்று கருணாநிதி தன் மறைமுக சாதிவெறியை தமிழ்மீது  வெளிபடுத்தினார்.இதே போக்கை கருணாநிதி அவர்களின் புதல்வர் இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்களும் இதே வரலாற்று திரிபு போக்கை தொடர்வது இன்றும் இப்படி திராவிடம் பகுத்தறிவு,

துயதமிழ்தேசம் என தன் நாவை மட்டும் அசைத்துவிட்டு முழுமையாக சாதிவெறியோடு ஆதி தமிழர்களான பரையர்களின் தியாக வரலாற்றை இந்த திமுக அரசு திரித்துள்ளார்.என்பது கருணாநிதி அவர்களின் கொள்கை அரசியலை தள்ளிவிட்டு,சுயநல சாதி அரசியலை அனைப்பதாகவே இப்போக்கு அமைகிறது.


ஆனால் சிலர் கேட்பார்கள் வெறும் பெயர் தனே ஏன் இதை இப்படி பேசுகின்றிர்கள்,என்று ஆமாம் வெறும் பெயர் தான் அதை ஏன் இப்படி சூச்சமத்துடன் வரிசைபடுத்துகின்றிர்கள்.

வரலாறுகளில் தியாகம் செய்வதெல்லாம் பரையர் கள் ஆனால் அதன் பெருமைகளை ஏற்பது யாரோவாக உள்ளார்கள்.


இதேபோல் தமிழ்,திராவிட, அரசியலின்ஞானியாகவும், முண்னோடியாகவும் திகழ்ந்த அயோத்திதாச பண்டிதர் திட்டமிட்டு வரலாறுகளில் மறைக்கப்பட்டு உள்ளார்.இந்த இடத்துக்கு யாருக்கோ பெருமையை வாரிபூசி விடுகின்றார்கள்.இந்த சாதிய திராவிட,தமிழ்வாதிகள் என்னதான் மறைத்தாலும் உண்மை வெல்லும்.!

மொழிப்போர் தியாகிகளுக்கு எம் வீரவணக்கம்.!


Comments

Popular posts from this blog

Pottri Thiru Agaval (போற்றி திரு அகவல்)

பழனி முருகனுக்கு எழுதப்பட்ட சிவகுலத்தோர் செப்பேடு.