சாம்பான்_பறையர்_குடும்பத்திற்கு_சொந்தமான_2400_ஆண்டுகள்_பழமையான_தொழிற்கூடம்
2012 ஆம் வருடம்,தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தில் " கல்வெட்டு மற்றும் தொல்பொருளியல்" துறை தலைவரான பேராசிரியர் திரு.கே.இராசன் என்பவரின் தலைமையில் ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா, கொடுமணல் கிராமத்தில் நொய்யல் ஆற்றங்கரையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கி.மு. 400 அதாவது 2400 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொழிற்கூடம் ஒன்று கண்டறியப்பட்டது, அதில் இரும்புத்தாதிலிருந்து இரும்பை பிரித்தெடுத்தது அதை எஃகு பொருளாக மாற்றியுள்ளனர். மேலும் பல கலைப்பொருட்கள்,ஈமத்தாழிகள், கற்கட்டமைப்புகள், வெங்கலத்தில் செய்யப்பட்ட புலி உருவம், தங்கத்தில் செய்யப்பட்ட சங்கிலி, பானைகள், பானை ஓடுகள் முதலிய பொருட்கள் கிடைத்தது.
அத்தொழிற்கூடத்தில் கிடைத்த பல பானைகளில் கிட்டட்த்தட்ட 130 பானைகளில் "சாம்பான் சுமணன்" என்ற எழுத்து தமிழ் பிராமி எழுத்துருவில் பொறிக்கப்பட்டுள்ளது என கண்டறிப்படுகிறது. இதைப்பற்றி பேராசிரியர் ராசன் கூறுவதாவது, சாம்பான் என்பவர் சுமணன் என்பவறின் தந்தையாக இருக்கலாம், மேலும் அத்தொழிற்கூடம் சாம்பான் குடும்பத்திற்கு சொந்தமானதாக இருந்திருக்கும் என்று கூறுகிறார்.(சாம்பான் என்ற சொல் பறையர்களை, பறையர்களின் தலைவரை குறிக்கும் சொல்)
மேலும் நொய்யல் ஆற்றங்கரையில் நெசவுத்தொழிற்ச்சாலை இருந்ததற்கான சான்றுகளும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளது. பஞ்சை நூற்கும் கருவிகள் போன்றவை கிடைத்துள்ளது. (கோலியப்பரையர்கள் நெசவு செய்த பறையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது)
Comments