பூணூலும் பறையரும்
பூணூலும் பறையரும்
""'''''''''''''''''''''"'""""" """""""""""""""""'"""
1853 ம் ஆண்டில் ஆரிங்டன் பிரபு அவர்களுக்கு பாடம் பயிற்றுவிக்க வந்த பிராமணர்கள் துரையவர்களின் இரு உதவியாளர்களைப் பார்த்து,
துரை அவர்களே அவர்கள் பறையர்கள் கீழ்சாதியினர்,நீச்சர்கள் நாங்கள் வீட்டுக்குள்ளே சேர்ப்பதில்லை என்றிருக்கின்றனர்.
ஆரிங்டன் பிரபு அவர்களும் தங்களுடைய உதவியாளர்களை வரச்சொல்லி அப்பிராமணர்கள் சொன்னது உண்மையா என்று வினவ?
கந்தசுவாமி என்பவர் ஐயா அவர்களுக்கும் எங்களுக்கும் பூர்வ விரோதம் உண்டு! அவர்கள் இருக்கும் பகுதிக்கு நாங்கள் சென்றால்
அவர்கள் எங்களை இழிவு கூறி துறத்துவது வழக்கம்!
எங்கள் பகுதிக்கு அவர்கள் நுழைந்தால் சேரி தீட்டு பட்டுவிட்டதென்று அடித்து விரட்டி சாணி கரைத்து தெளித்து அவர்கள் ஓடிய திசையை நோக்கி சாணிச் சட்டியை உடைப்பது எங்கள் வழக்கம். நாங்கள் பெரும் பாலும் பயிர்த்தொழில்தான் செய்து வருகிறோம். அவர்கள் பிச்சையிரந்து உண்பவர்கள்.
இருவரில் யார் நீச்சர்கள் என நீங்களே முடிவு செய்யுங்கள் என்று சொல்ல பிராமணர்களைப் பார்த்து ஆரிங்டன் பிரபு இதற்கு என்ன சொல்றிங்க என்று பிராமணர்களைப் பார்த்து கேள்வி கேட்க அப்பிராமணர் அக்கேள்விக்கு பதிலளிக்காமல் பாடம் நடத்த தொடங்கினர் என்பதை ஐயன் அயோத்திதாச பண்டிதர் பதிவுசெய்திருக்கிறார்.
ஆங்கிலேய காலம் வரையில் ப(ம)றையர்களுக்கென தனி அக்கிரகாரங்கள் இருந்தன. அவற்றை அம் ம(ப)றையர் குடியினர் அகராவரங்கள் என்று குறிப்பிட்டனர்.
காட்டுப்பாடித் தொடர் வண்டிநிலையத்தின் ஒரு புறத்தில் இருந்த பறையர் சேரியை அகராவரம் என்றே அழைத்துவந்தனர். பறையரின்
அகராவரத்தைப் பற்றிக் குறிப்பிடும் அபிதான சிந்தாமணி,
" அவர்களுக்கும் ( பிராமணர்களுக்கும்)
ஊர்க்கு புறம்பாக அக்கிரகாரம் உண்டு.
எங்கட்கும்( பறையர்களுக்கும்) ஊர்க்குப் புறம்பாக இடமுண்டு. அவர்களிருக்குமிடத்தில் நாங்கள் போகக் கூடாது. நாங்கள் இருக்கும் இடத்தில் அவர்கள் வரக்கூடாது.
அவர்களுக்கும் பூணூல் உண்டு! எங்களுக்கும் பூணூல் உண்டு என்பர்.
இவர்கள் சில திருவிழாக்களில் மற்ற சாதியாருடன் ஒத்த உரிமை பெற்றவர்களாய் இருக்கின்றனர்.
தென்னாட்டில் நடைபெறும் தேர்த்திருவிழாக்களில் தேரிழுக்க இவர்களே முன்னிற்கின்றனர். திருவாரூரில் சாமிக்கு முன் யானையேறும் பெரும் பறையன் யானை மீதேறி கவரி வீசிச் செல்கிறான் ,என்று கூறுகின்றது.
12 ம் நூற்றாண்டில் எழுதப்பட்டதென கருதப் படும் ஞானவெட்டியான் பல சான்றுகளைப் பகிரும்
"பூணூல் தரித்துக் கொள்வோம்- சிவசிவ
பொறியுமைம் புலனைந்துந் தொழுது கொள்வோம் வேண விருதுகளும்- விகிதமாய் வெண்குடை வெண்சாமரமும் பிடித்துக் கொள்வோம்."
என்று பறையர்கள் பூணூல் அணிந்து வந்துள்ளமைக்கு சான்று பகிரும். பறையர்களை கோயில்களில் இருந்து வெளியேற்றிய வேடப் பிராமணர்களை
நோக்கி பல கேள்விகளையும் வைக்கிறது?
"ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்!
ஆட்டிறைச்சி அல்லவோ யாகம் நீங்கள் ஆற்றலே?
மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்?
மாட்டிறைச்சி அல்லவோ மறக்கறிக்கு இடுவது?
மீனிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்!
மீனிருக்கும் நீரல்லோ மூழ்வதும் குடிப்பதும்?
மானிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்!
மானுரித்த தோலல்லோ மார்பு பூணூல்
அணிவதும்?
என்று மானூரித்த தோலில் பூணூல் அணிந்து வந்ததையும் ஞானவெட்டியான் கூறும்.
மான் தோலிலேயே திருஞானசம்பந்தருக்கு பூணூல் அணியப் பட்டதையே
" தொல்லைமறை விதிச்சடங்கு மறையோர் செய்யத் தோலோடுநூல் தாங்கினார் சூரர்கள் போற்ற" என்கிற பாடல் கூறும்.
பெரிய புராணமும்
"கோதில் மான்தோல் புரிமுந்நூல் குலவு மார்பிற் குழைக்குடுமி " என்று
பூணூல் மான் தோலில் அணியப் பட்டதையே காட்டுகிறது.
சிலப்பதிகாரம்
"நால்வகை மறையோன்
பறையூர்க் கூத்தன் சாக்கையன் " என்று தெரிவிக்கிறது.
முன்கலை திவாகர நிகண்டு
" வள்ளுவர் சாக்கையரெனும் பெயர்மன்னர்க் குள்படும் கருமத்தலைவரைக் குறிக்கும்." என்கிறது.
சீவக சிந்தாமணி
கோத்தநித்திலக் கோதை மார்பினான்
வாய்த்த வன்னிரை வள்ளுவன் சொன்னான் என்கிறது.
வள்ளுவர்கள் சிலர் இன்றும் பூணூல் அணியும் வழக்கமுடையவர்கள்.
தங்களான் பறையர்கள் தங்களை மறையர்கள் என்றதை சி்.டி. மெக்ளீன் குறித்துள்ளதை தென்னிந்திய குலங்களும் குடிகளும் நூலில் எட்கர் தர்ஸ்டன் அவர்கள் குறித்துள்ளார்.
மணவறையில் பறையர்கள் பூணூல் அணிவது கடந்த நூற்றாண்டு வரை இருந்து வந்துள்ளது.
"சிறிவள்ளுவம் பூவாணன் உவச்சன்" என்கிற வட்டெழுத்து வரியை அபிதான சிந்தாமணி எடுத்தியம்புகிறது.
உவச்சன், குருக்கள் என்பவர் கோயில் பூசாரிகள் என்று ஐயன் பாவாணர் விளக்குவார்....
ஆக இங்க பன்றிக்கு பூணூல் போடுறன்னு கிளம்புறவனும்
அனைத்து சாதியும் அர்ச்சகராகலாம்னு
சொல்றவனும் பறையனின் அடையாளத்தை தமிழனின் அடையாளத்தை வடுக பிராமணவோலுக்கு தாரை வார்க்கிறார்கள்.
பூணூல் பறையனின் அடையாளம்.
"பார்ப்பானுக்கு மூத்தவன் பறையன்"
"பார்ப்பானும் பறையனும் ஒன்று"
( தொகுப்பு- வள்ளுவ பார்ப்பரியம் நூல்)
Comments