சாக்கிய பரையர்கள் (எ) வேள் பார்ப்பனர்
ஒப்பற்ற சோதிட சாத்திரங்களை உலகிற்கு தந்தவர்கள் சாக்கிய குலத்தவர்கலான பரையர்களே. வளி யை ஆய்வு செய்ததனாலே வள்ளுவ பரையர் என்று அழைக்கபட்டனர். வாழ்வியலுக்கு சோதிட சாத்திரமே அஸ்திவாரம்.
சாக்கிய பரையர்கள்
வேள் பார்ப்பனர் (எ) வேள்வி செய்வது, பூசனை, மாந்திரீகம் போன்றவை செய்யும் பார்ப்பனர் மற்றும் வேளா பார்ப்பனர் (எ) வேள்வி செய்யாது பிற காரியங்கள் செய்யும் பார்பனர் என இரு வகைபடுவர். இதில் வேதங்களின் கண்களான சோதிடத்தை கொண்டு பார்பவனே இந்த வேளா பார்பனனான வள்ளுவ பரையன் ஆவான்.
சோதிடம் உழவு என அனைத்திற்கும் பிராதானமான சூரியனும் முக்கியத்துவம் தந்து வழிபடுவது குறிப்பிடடதக்கது. சூரீய பொங்கள் மற்றும் சித்திரை புத்தாண்டும் இதன் காரணமாகவே கொண்டாடபட்டது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரை திருநாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றோம் சித்திரை மாதம் புத்தாண்டின் தொடக்கம் என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஓர் ஆண்டு. சூரியன், பூமத்திய ரேகையில் நேராகப் பிரகாசிக்கும் மாதம், ஆண்டின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. சூரியன், முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வகையில் உள்ள காலம் சித்திரை மாதம். சித்திரையில் துவங்கி, பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம் மாதத்தின் பவுர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்தின் பெயர். உதாரணமாக, சித்திரை மாதம் பவுர்ணமியன்று சித்திரை நட்சத்திரம் வருவதால் அந்த மாதத்தின் பெயரே சித்திரை. இதே போன்று, வைகாசி மாதம் பவுர்ணமியன்று, விசாக நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி. இப்படி, ஒவ்வொரு மாதத்திற்கும், இந்த அடிப்படையிலே பெயர்கள் வழங்கப்படுகின்றன.
பார்பனரான பரையர்களின் சோதிடம், மறைகள், பஞ்சாங்கம் (எ) ஐந்திரம் போன்றவைகள் பிற்காலங்களில் மாற்று மொழிகளில் மொழிபெயர்கபட்டது. இதை அறிஞர் குணா அவர்களே ஆதாரத்தோடு தனது நூல்களில் பதிவு செய்துள்ளார்.
ஒருபுறம் பரையர்களுக்கு உறிமையான இவைகளை தனக்கு சொந்மாக்கிகொள்ளும் முயலும் சிலர், மற்றொருபுறம் அவைகளை பொய்யென தவராக பிரசாரம் செய்யும் வேறு சிலர். இவைகளுக்கிடையே தன் சுய வரலாற்றை மறந்து (இழந்து) வருகின்றனர் பரையர்கள். சோதிடத்தில் கூறப்பபடும் 60 வருடங்களின் பெயர்களை பற்றி தவராக சிலர் பிரசாரம் செய்வதை காணமுடிகிறது.
அதாவது கிருஷ்ணர் நாரதரை ஒரு பெண்ணாக மாற்றி அவருடன் 60 வருடம் வாழ்ந்தார். அவர்கள் இருவருக்கும் 60 மகன்கள் பிறந்தனர்.
பிறந்த அந்த 60 மகன்களின் பெயர்களே சோதிடத்தில் வரும் 60 வருடங்களின் பெயர்கள் ஆயின என்ற பொய் பிராசரத்தை செய்து வருகின்றனர்.
உண்மையில் இதில்
கூறப்பட்ட சம்பவம் நமது வியாச பரையனால் இயற்றபட்ட வேத புராணங்களிளோ அல்லது மகாபாரதத்திலோ இல்லை.
இது ஆ.சிங்காரவேலு முதலியார்
என்பவரால் கடந்த நூற்றாண்டில்
எழுதப்பட்ட அபிதான சிந்தாமணி எனும் "கதைக் களஞ்சிய" நூலின் புனைக்கதை.இதை உண்மை என நம்பிய பல பரையர்கள் தனது மூதாதையர்கள் தனக்ளித்த பொக்கீஷங்களை கண்மூடித்தனமாக எதிர்த்தும் தவராக பேசியும் வருகின்றனர்.
இலக்கிய ஆதாரங்கள்: "சித்திரையே வா நம் வாழ்வில் முத்திரை பதிக்க வா' என்று சொல்லும் மரபு உண்டு . சோழர் கல்வெட்டுக்களிலும், கொங்கு பாண்டியர் கல்வெட்டுக்களிலும், 60 ஆண்டுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.
அகத்தியரின், "பன்னாயிரத்தில்' பங்குனி மாதம் கடை மாதம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. "திண்ணிலை, மருப்பின் ஆடுதலை' என்று நக்கீரர் கூறியிருக்கிறார். இந்தப் பாடலில் வரும் ஆடு தலைக்கு, மேஷ ராசி என்று, பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலில் விளக்கம் கொடுத்துள்ளார், முனைவர் ராசமாணிக்கனார். புஷ்ப விதி என்னும் நூலில், சித்திரை முதல் மாதம் என்று விளக்கம் கொடுத்துள்ளது.
நாமக்கல் கவிஞரும், "சித்திரை மாதத்தில் புத்தாண்டு தெய்வம் திகழும் திருநாட்டில்' என்ற தன் வாழ்த்துப் பாடலின் மூலம் தமிழ்ப்பண்பாட்டின் தொடக்கம் சித்திரை மாதம் என்பதைத்தெரிவித்துள்ளார். கோடைக்காலமே முதலாவது பருவம் என, சீவக சிந்தாமணியில் வருணிக்கப்பட்டுள்ளது.
சோதிடத்தில் கூறப்படும்
60. வருடங்களுக்கான
சரியான தமிழ் பெயர்கள் இதோ:-
1 நற்றோன்றல் - பிரபவ
2 உயர்தோன்றல் - விபவ
3 வெள்ளொளி - சுக்கில
4 பேருவகை - பிரமோதூத
5 மக்கட்செல்வம் - பிரசோற்பத்தி
6 அயல்முனி - ஆங்கிரச
7 திருமுகம் - ஸ்ரீமுக
8 தோற்றம் - பவ
9 இளமை - யுவ
10 மாழை - தாது
11 ஈச்சுரம் - ஈஸ்வர
12 கூலவளம் - வெகுதான்ய
13 முன்மை - பிரமோதி
14 நேர்நிரல் - விக்ரம
15 விளைபயன் - விஜ_
16 ஓவியக்கதிர் - சித்ரபானு
17 நற்கதிர் - சுபானு
18 தாங்கெழில் - தாரண
19 நிலவரையன் - பார்த்திப
20 விரிமாண்பு - விய
21 முற்றறிவு - சர்வசித்
22 முழுநிறைவு - சர்வதாரி
23 தீர்பகை - விரோதி
24 வளமாற்றம் - விக்ருதி
25 செய்நேர்த்தி - கர
26 நற்குழவி - நந்தன
27 உயர்வாகை - விசய
28 வாகை - சய
29 காதன்மை - மன்மத
30 வெம்முகம் - துர்முகி
31 பொற்றடை - ஏவிளம்பி
32 அட்டி - விளம்பி
33 எழில்மாறல் - விகாரி
34 வீறியெழல் - சார்வரி
35 கீழறை - பிலவ
36 நற்செய்கை - சுபகிருது
37 மங்கலம் - சோபகிருது
38 பகைக்கேடு - குரோதி
39 உலகநிறைவு - விசிவாவசு
40 அருட்டோற்றம் - பராபவ
41 நச்சுப்புழை - பிலவங்க
42 பிணைவிரகு - கீலக
43 அழகு - சௌமிய
44 பொதுநிலை - சாதாரண
45 இகல்வீறு - விரோதிகிருது
46 கழிவிரக்கம் - பரிதாபி
47 நற்றலைமை - பிரமாதீச
48 பெருமகிழ்ச்சி - ஆனந்த
49 பெருமறம் - இராட்சச
50 தாமரை - நள
51 பொன்மை - பிங்கள
52 கருமைவீச்சு - காளயுத்தி
53 முன்னியமுடிதல் - சித்தார்த்தி
54 அழலி - ரௌத்ரி
55 கொடுமதி - துன்மதி
56 பேரிகை - துந்துபி
57 ஒடுங்கி - ருத்ரோத்காரி
58 செம்மை - ரக்தாட்சி
59 எதிரேற்றம் - குரோதன
60 வளங்கலன் - அட்சய
Comments