பறையி பெற்ற முதல் குழந்தை அக்னி ஹோத்ரி

பறையி பெற்ற முதல் குழந்தை அக்னி ஹோத்ரி:-

இன்றைய கேரளாவில் பரவலாக அறியப்படும் நாட்டார் கதை ஒன்று உள்ளது, அது பறையி பெற்ற பன்னிரு குலம் என்பதாகும்.

அதாவது பறையி ஒருவரின் அறிவு திறமையை கண்டு வியந்த வரருசி என்ற பிராமணர் அவளை திருமணம் செய்துகொள்கின்றார், பிறகு அவர்கள் இருவருக்கும் குழந்தை பிறக்க... குழந்தைக்கு வாய் உள்ளதா என்று வரருசி கேட்கின்றார். ஆம் இருக்கு என்று பறையி சொன்னதும்... குழந்தையை விட்டுவிடு என்கின்றார் வரருசி, பிறகு குழந்தையை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு அவர்கள் இருவரும் வேறு பகுதிக்கு செல்கின்றனர்.

இவ்வாறாக அவர்களுக்கு 12 குழந்தைகள் பிறந்து அவை அனைத்தும் பன்னிரண்டு குலங்களாக மாறின என்பதே அந்த நாட்டார் கதையாகும்.

அதில் முதல் குழந்தை அக்னிஹோத்திரி என்ற மகனாகும்.

இதில் சுவாரஸ்யமான ஒரு தகவல் உள்ளது, வாய் பேச தெறிந்த குழந்தையை கைவிடுகின்றனர், அதை இவ்வாறாகவும் பார்க்கலாம்... ஒவ்வொரு குலமும் தங்களுக்கு என தனித்த அடையாளம் பெற்ற போது அவர்களின் தாய் பறையி என்பதை மறைத்துவிடுகின்றனர்.

Comments

Popular posts from this blog

Pottri Thiru Agaval (போற்றி திரு அகவல்)

இந்தி எதிர்ப்பு முதல் களபலி போராளி நடராசன்

பழனி முருகனுக்கு எழுதப்பட்ட சிவகுலத்தோர் செப்பேடு.