ஞானம் வெட்டிய திருவள்ளுவ பரயன்
திருவள்ளுவர் பறையர்
என்பதை விளக்கும் பொருட்டு பல விவாதங்களை நம் முன்னோர்கள் நடத்தியுள்ளனர்.
ஏனெனில் திருவள்ளுவரை வேஷ பிராமணர்கள் தன் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று உரிமைக் கொண்டாடினர். அப்பொழுது சூத்திர வர்ணத்திற்க்குட்பட்ட சாதிகள் அனைத்தும் மௌனம் காக்கையில் பறையர் குல அறிவுஜீவிகள் வேஷ பிராமணர்களுடன் பல விவாதங்களில் கலந்துக்கொண்டு விவாதித்து திருவள்ளுவரை பௌத்தர் என்றும் பறையர் என்றும் பறைசாற்றியுள்ளனர்.
பண்டித அயோதிதாசரும் வள்ளுவரை பறையர் என்று அறியப்படும் பூர்வ பௌத்தர் என்றே சொல்கிறார்.
அண்ணல் அம்பேத்கரின் செடியூல்டு ஃபெடரேஷனின் தளபதி தந்தை சிவராஜ் அவர்களின் பாட்டனார் பூ.அ. கோவிந்தராசத்தாச பண்டிதர் அத்தகைய விவாதங்களில் கலந்துக்கொண்டு வேஷ பார்ப்பனர்களுக்கு எதிராக வள்ளுவரை ஓர் ஆதிதிராவிடர் என்று வாதாடியுள்ளார்.
பாரதியும் வள்ளுவரை பஞ்சமர் என்றே கூறியுள்ளார்.
திருக்குறளை இவ்வுலகிற்க்கு வெளிக்கொண்டு வந்ததும் கந்தப்பன் என்கிற பறையர் தான்.
1856-ல் ‘எ கம்பேரிட்டிவ் கிராமர் ஆஃப் தி திராவிடியன் ஆர் சவுத் இண்டியன் ஃபேமிலி ஆஃப் லாங்குவேஜஸ்’ (திராவிட அல்லது தென்னிந்திய மொழிக்குடும்பம் பற்றிய ஓர் ஒப்பீட்டு ஆய்வு) என்ற புகழ்பெற்ற நூலை எழுதியவரான ராபர்ட் கால்டுவெல், திருக்குறள் மிகப் பழமையான நூல் என்றும், அதை எழுதிய திருவள்ளுவர் ஒரு பறையர் என்றும் கருத்துத் தெரிவித்தார்.
கால்டுவெல் தமது சமகாலத்தவர்கள் பலரும் செய்ததுபோலவே, வள்ளுவன் மரபை பிராமண எதிர்ப்பு என்ற கண்ணோட்டத்திலேயே அணுகினார். பறையர்கள்தான் உண்மையான தமிழர்கள் என்ற கருத்தை முனவைக்க முயன்றார். ‘தென்னிந்திய பறையர்கள் திராவிடர்கள்தானா?’ என்ற தமது கட்டுரை ஒன்றில் அவர்கள் ஆதிதிராவிடர்கள் என்று அவர் வாதிட்டார்.
அவரது காலத்தைச் சேர்ந்த இதர பிரிட்டிஷ் ஆய்வாளர்களது எழுத்துக்களிலும் இக்கருத்துகள் பிரதிபலித்தன. 1873ல் எட்வர்ட் ஜூவிட் ராபின்சன் என்ற எழுத்தாளர், ‘திருவள்ளுவர் ஒரு பறையர் என்பதில் எவருக்கும் ஐயமில்லை,’ என்று எழுதினார்.
சார்லஸ் கோவர் போன்ற சமயப் பிரசாரகர்களும் திருக்குறள் மீது வலிந்து ஏற்றப்பட்டிருக்கின்ற பிராமணியக் கருத்தாக்கம் விலக்கப்பட வேண்டும்; திருவள்ளுவர் ஒரு தாழ்த்தப்பட்ட திராவிட சாதியைச் சேர்ந்தவர்தான் என்ற உண்மை ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் என்ற வாதத்தையே முன்வைத்தார்.
அதைத் தொடர்ந்து ட்ரெமன்னீரே உள்ளிட்ட ஆங்கிலேய அதிகாரிகள், பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த அருட் புலவர் திருவள்ளுவர் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்ச்சிகளில் ஈடுபட்டனர். ட்ரெமன்னீரே தமது கருத்தை வலியுறுத்துவதர்க்காக, திருவள்ளுவரை ‘தெய்விகப் பறையர்’ என்று குறிப்பிட்டார்.
1890 ஆம் ஆண்டுவாக்கில் அருள்திரு ஜி.யு. போப், இந்திய சமூகங்களிலேயே மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகமாக ‘பறையர் இனம்’ இருந்தபோதிலும், மிக மூத்த தொல்குடி இனங்களில் ஒன்றாகவும் அது இருந்தது என்ற கருத்தை முன்வைத்தார். பறையர்கள் மிகவும் கல்வி ஞானம் பெற்றவர்களாகவும் இருந்தார்கள், தென்னிந்தியாவில் அவர்களது வரலாறு இதைத் தெளிவாக காட்டுகிறது.
‘தென்னிந்தியாவைச் சேர்ந்த தமிழ் பேசக்கூடிய யாரை வேண்டுமானாலும், உகிலேயே மிகச் சிறந்த நூல் எது என்று கேட்டால் அவர் ‘குறள்’ என்றே பதிலளிப்பார்; தெலுங்கர்களிடம் சென்று இதே கேள்வியைக் கேட்டால் அவர்களும், ‘குறள்தான் சிறந்த நூல் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்’ என்று கூறுவார்கள். குறளை எழுதியவர் யார்? ஒரு பறையர்,’ என்று எழுதியுள்ளார் ஜி.யு. போப்.
மேலும் பிரதான பறை பிரிவுகளில் வள்ளுவப் பறையர் என்ற குடிகளும் ஒன்று என்பது பலரும் அறிந்தது.
உதாரணமாக ( வள்ளுவப் பறையன், சாம்பவ பறையன், தங்கலான் பறையன், முரசப் பறையன், தோட்டிப் பறையன், கோலியப் பறையன், சோழியப் பறையன், தலையாரிப் பறையன், உழு பறையன், குழிப் பறையன், கொம்புகாரப் பறையன், பள்ளப் பறையன், கட்டியப் பறையன், தாதப் பறையன், சங்குப் பறையன், அச்சாலிப் பறையன், துச்சாலிப் பறையன், மொட்டப் பறையன்.)
{{{ஆதாரம்.. அறிஞர் அன்பு பொண்ணோவியத்தின் "அயோதிதாசர் பண்டிதரின்" நூலும்
ராஜ் சேகர் பாசு எழுதிய
"நந்தனின் பிள்ளைகள்
பறையர் வரலாறு (1850 - 1956)" என்ற நூலும்
ஜெ. பாலசுப்பிரமணியம் எழுதிய "சூரியோதயம் முதல் உதய சூரியன் வரை" என்ற நூலும். }}}
Comments