பரையர் குல சோழ மன்னரான "பிறவிடை சாம்பான்" என்பாரது சமாதியே தஞ்சை பெருவுடையார் கோவில்


தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட  " *இடங்கையர் வலங்கையர் சரித்திரம்* " என்னும் நூலில்  இது ஆதாரபூர்வமாக உள்ளது வலங்கையர் வரலாறு ( டி 462 ) என்னும் சுவடியில் " *பிறவிடை சாம்பான்* " மன்னரது வரலாறு விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

இந்த சுவடிகள் இன்றும் தமிழ்நாடு கீழ்த்திசை சுவடிகள்  நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது சுவடி கூறும் வரலாறு  *ராவணன் என்னும் மல்லியை பெருமானுக்கு  மூன்று மகன்கள் இருந்தனர்* .

1)சாம்புகன்
2)பிறவிடைசாம்பான்
3)தியாகன் என்னும் தியாகச் சாம்பான்

இவர்கள் அக்கால சோழ மண்டலத்தில்  சிறிய கோட்டை கட்டி பழங்குடி மன்னர்களாக* வாழ்ந்துள்ளனர் பிறவிடை சாம்பானது கோட்டை " *விளாறுகோட்டை* "  அதுவே பின்னாளில்  'விளாரிகோட்டை' என்று திரிந்தது என்கின்றனர். இந்த கோட்டை *வெண்கலத்தாலும் இரும்பு தூண்களாலும் மண்ணாலும் கட்டப்பட்டது* என்றும் அதனால் இக்கோட்டையானது  என்றும் 'மலாரிகோட்டை" என்றும் வழங்கப்பட்டது சோழ மன்னன் "பிறவிடை சாம்பான்" மரித்த பின்  இந்த கோட்டையில் தகனம் செய்யப்பட்டான் .

*கணவன் மரித்த துயரத்தில் அவனது மனைவி  பெரிய நாயகியும்* அவ்விடத்திலே தீ குளித்து இறந்தால் "பிறவிடை சாம்பான்" மரணித்த அந்த இடத்திலே  ஒரு *வேப்ப மரமும் ஒரு அரசமரமும் வைத்து  திண்ணை அமைத்து இரண்டு செங்கல் வைத்து*  அவர்களை "தெய்வமாக" அந்த ஊர் மக்கள் வணக்க துவங்கினர்.

*அந்த இடத்திலே நந்தவனமும் கிணற்று  தண்ணீர் பந்தலும் பிற்காலத்தில் அமைக்கபட்டது* பிற்காலத்தில் "பரகேசரி சோழ மாமன்னர்" இவ்விடத்திற்கு வந்த பொழுது  "பிறவிடை சாம்பான்" தகனம் செய்யப்பட்ட  *அவ்விடத்தின் சிறப்பை கேட்டு இரண்டு நாள் அங்கு தங்கினார்* அவ்வாறு "பரகேசரி மாமன்னர்" *அங்கு தங்கும் பொழுது  "பிறவிடை சாம்பனும்" அவரது மனைவி "பெரிய நாயகியும்"  பரகேசரி மாமன்னர் கனவில் தோன்றி அவ்விடத்தில் அவர்களுக்கு திருப்பணி செய்யுமாறு கூறினார்* என்றும்  பரகேசரி மன்னர் அவ்விடத்தில் வேண்டிய காரியம் கைகூடியதால்
அதன் பேரில் அவ்விடத்திலேயே  "பிறவிடை சாம்பானுக்கு கோவில்" *கோவில் எழுப்புவதாக  பிரதிக்கினை செய்ததை இச்சுவடி குறிப்பிடுகிறது* .
பின்னாளில் தான் எடுத்த பிரதிக்கினை நிரைவேற்றும் விதமாக
விவசாய பூமியாய் இருந்த பகுதியில் சுற்றிலும் மதில் எழுப்பி  கோபுரம் வைத்து "பிறவிடைசாம்பானுக்கு"  உலகம் வியக்கும் வகையில் பெரிய கோவிலை காட்டினார் அக்காலத்தில் " *பிறவிடை சாம்பான் கோவில்* " என்று அழைக்கபட்ட இக்கோவிலானது  பின்னாளில் " *பெருவிடை நயினார் கோவில்* " என்று பெயர் மாற்றி பூசிக்கப்பட்டது என்றும் அதுவே பிற்காலத்தில் "வடுக தெலுங்கு மன்னர்கள்" கட்டுப்பாட்டில் " *பெருவிடை ஈசுவரன் கோவில்* " என்று அழைக்கப்பட்டதாகவும் மராட்டிய மன்னர்கள் கட்டுப்பாட்டில் வந்தபொழுது
முழுக்க வடமொழியில் திரிந்து " *பிரகதீஸ்வரர் கோவில்* " என்று வழங்கப்படுகிறது  என்று அறிய முடிகிறது படையெடுப்புகள் பல நிகழ்ந்தாலும் பெயர்கள் வடமொழியில் திரிந்தாலும்  *பரையர் குல மன்னர் "பிறவிடை சாம்பான்"  அவர்களது புகழ் கதிரவன் போல்  இன்றும் என்றும் மறைக்க முடியாமல்  நிலைத்திருக்கிறது* ....!!!

நூல்: தமிழ்நாடு கீழ்த்திசை சுவடிகள் பதிப்பகம் வெளியிட்ட
"இடங்கையர் வலங்கையர் வரலாறு"

*வாழ்க பறையர் பேரினம்,
வளர்க சாம்பவர் குல ஒற்றுமை*

Comments

Popular posts from this blog

Pottri Thiru Agaval (போற்றி திரு அகவல்)

இந்தி எதிர்ப்பு முதல் களபலி போராளி நடராசன்

பழனி முருகனுக்கு எழுதப்பட்ட சிவகுலத்தோர் செப்பேடு.