பரையர் பூமி நாவலன் தீவு

நாவலந் தீவு பரையர்களின் பூர்வீகம்
...............
ஒவ்வொரு கடற்கோளுக்குப் பின்னும் எஞ்சி நிற்கும் மலைப் பகுதிகள் யாவும் நம் மூதாதையர்கள் வாழ்ந்த பகுதிகள் என்பது உறுதி.

இந்த மலையைச் சுற்றிலும் நான்கு புறமும் நீர் சூழ்ந்துதான் காணப்படும். அதை "தீவு" என்று கூறுவர்.

எனவே முதல் நிலப்பகுதி தீவுதான் என்பதும், அது ஒரு மலைப் பகுதி என்பதும் உறுதி. காலத்தின் மாற்றத்தால் அதுவே தீபகற்பமாக மாறியது எனலாம். அப்படி தீவாக இரு தீபகற்பமாக மாறிய நாடு தான் நம் நாடு.

இதன் ஆரம்பப் பெயர் தான் "நாவலந் தீவு"  என்பதை ஒவ்வொரு இந்தியனும் அறிவர்.
இந்த நாவலந் தீவிலிருந்து தான் நம் வரலாறு தொடங்குகிறது.

நாவல் மரம் நிறைந்திருந்ததால் நாவலந் தீவு என்று அழைக்கபட்டது. நாவல் மரத்தை ‘சம்பு’ மரம் என்றும் சம்பு தீவு என்றும் அழைக்கபட்டது.

சமஸ்கிருத சுலோகங்களில் ஜம்புத்வீபு (சம்பு தீவு) என்ற வார்த்தையை இன்று காணமுடிகிளது. அதனால் தான் அங்கு வாழ்ந்தவர்களை சாம்பவர்கள் என்றும் நாகர்கள் என்றும் அத்தீவின் பெயரால் அழைக்கப் பெற்றனர்.

சங்க இலக்கியம் மணிமேகலையிலும் ‘சம்பு மரம்’ மற்றும் ‘சம்புத் தீவு’ என்ற குறிப்பு உள்ளது.

தென்றிசைப் பெயர்ந்தவித் தீவத் தெய்வதம்
சாகைச் சம்பு தன்கீழ் நின்று
மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு….
----மணிமேகலை:பதிகம் 4,5,6

(இங்கு குறிப்பிடும் தீவு சம்புத் தீவே. சம்புத் தீவு- நான்கு மகாதிவினுள் ஒன்று. இது நாவலந்தீவெனவும் வழங்கப்படும். சாகை-கிளை;  சம்பு-நாவன் மரம்)
சம்பு வென்பாள் சம்பா பதியினள்
செங்கதிர்ச் செல்வன் றிருக்குலம் விளக்கும்
----மணிமேகலை: பதிகம் 8,9

(சம்பாபதியினள்- சம்பாபதியிடத்தே இருந்தாள்; சம்பாபதி என்பது காவிரிப் பூம்பட்டினத்தின் பழைய பெயர் ; செங்கதிர் செல்வன் திருக்குலம்-சூரிய குலம்)
செங்குணக் கொழுகியச் சம்பா பதியயல்
பொங்குநீர்ப் பரப்பொடு பொருந்தித் தோன்ற
----மணிமேகலை: பதிகம் 13,14

நாவ லோங்கிய மாபெருந் தீவினுட்
காவற் றெய்வதந் தேவர்கோற் கெடுத்த..
----மணிமேகலை: ஊரலருரைத்த காதை 13,14

(செங்குணக்கு-செவ்விய கிழக்கு; செம்மை- நேர்மை
சம்பாபதி- சம்புத் தீவத்தின் அதி தேவதை; இஃது இவளுக்கு இயற்பெயர்; சம்பு மரத்தின் கிழிருந்து நோற்றமையின் இவள் சம்புவெனவும் பெயர் பெறுவாள்; சிவந்த நிறமும் சடையுமுடையவள்; இவளிருந்தமை பற்றி ஆதி காலத்தே சம்பாபதியென்று பெயர் பெற்றிருந்த நகரம், காவேரி நதியின் சம்பந்தத்தாற் பின்பு காவிரிப்பூம்பட்டினமென்று பெயர் பெற்றது;

புத்திரசோகமுற்ற கோதமைக்கு இந்தச் சக்கரவாளத்துள்ள எல்லாத் தேவர்களையும் வருவித்துக் காட்டி அச்சோகத்தை மாற்றி அவளைத் தோற்றுவித்தவள்; இவளுடைய கோயில் குச்சரக் குடிகையென்று கூறப்படும்; அருந்தவமுதியோன் கன்னி, குச்சரக்குடிமைக்குமரி, சம்பு, சம்புத்தீவக் காவற்றெய்வம், சம்புத்தீவத்தெய்வம், தொன்மூதாட்டி, பொன்னிற் பொலிந்த நிறத்தாள், முந்தை முதல்வி, முதியாள், முது மூதாட்டியென மணிமேகலையில் வழங்கப்படுவாள்)

நால்வகை மரபின் மாபெருந் தீவும்
ஓரீ ராயிரஞ் சிற்றிடைத் தீவும்
----மணிமேகலை: சக்கரவாளக்
கோட்டமுரைத்த காதை 195,196

(மேரு மலையும் அதனைச் சூழ்ந்துள்ள ஏழுகுலகிரிகளும் அக்குலகிரிகளுள் ஒவ்வொன்றினையும் சூழ்ந்து அவ்வக்கிரியின் உயர அளவுள்ள ஆழமும் அகலமுமமைந்த ஏழு கடல்களும் ஆகிய இவற்றையெல்லாம் சூழ்ந்து கிடக்கும் பெரும் புறக்கடலிலுள்ள சம்புத்தீவு முதலிய நான்கு மகாத்வீபங்களும். இந்த நான்கினுள் தெற்கேயுள்ளது சாம்புத்தீவு. இது நாவலந்தீவெனவும் கூறப்படும்.

மகாத்வீபம் நான்கினுள் ஒவ்வொன்றையும் தனித்தனியே ஐந்நூறாகச் சூழ்ந்துள்ள இரண்டாயிரம் சிறு தீவுகளும் உள்ளன.)
பண்டைககாலம் முதல் இன்றுவரை குறிப்பிட்ட மரம் அதிகம் உள்ளபகுதிகளை அம்மரத்தின் பெயராலே அழைப்பது வழக்கம். உதாரணமாக புளியஞ்சோலை, ஈச்சம்பட்டி, வேப்பம்பட்டி, பனந்தோப்பு, பணையூர், கடம்பூர்... என்று பல உதாரணங்களை அடுக்கலாம்.

"நாவலந் தீவே இறலித் தீவே  குசையின் தீவே
கிரவுஞ்சத் தீவே சான்மலித் தீவே தெங்கின் தீவே
புட்கரத் தீவே எனத்தீ வேழே
ஏழ்பெருந் தீவும் ஏழ்பொழி லெனப்படும்"
                      --திவாகரம்

திவாகரம் என்னும் நூல் கூறும் ஏழு தீவுகளும் இந்த நாவலந் தீவுதான். நமது #சாம்பவர் குலத்தான் ஆதி நாதன் #சிவ_சாம்பவனின் பூமியாகும். முதல் சித்தனான இவர் நாகர் இனத்தின் சாம்பான் என்பதாலே சிவ சாம்பவன், சாம்ப சிவன், ஜம்புகேஸ்வரன், சம்பு, மலையப்பன், ஐயன் என்றெல்லாம் அழைக்கப்பட்டான். திருச்சி அருகே உள்ள திருவாணைக்காவல் என்னும் ஊர் பஞ்சபூதங்களில் நீர் எனும் பூதத்திற்குறிய சிவ தலமாக விளங்குகிறது. அங்குள்ள சிவனின் பெயர் ஜம்பூகேஸ்வரர் ஆகும்.

முதன்முதலில் நாவலந்தீவின் தலைவனான சிவனின் பெயரான ஜம்புகேஸ்வரனின் பெயரையே இன்றுவரை நீருக்குள்ள தலத்தின் சிவனுக்கு இன்றும் அழைக்கின்றனர்.

சிவனே புளித்தோள் போன்ற தோலாடை அணிந்த வேடுவன் ஆவான். நாவலந்தீவில் வாழ்ந்த நம் சாம்பவர்கள் வேடுவர்களாகவும் காவல்பரையர்களாகவும் இருந்துள்ளனர். நாயன்மார்களில் கண்ணப்ப நாயனார் சாம்பவர் இனத்தவரே.

அதேபோல ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வாரும் நம் சாம்பவரான நாகர் இனத்தவரே. அவர் ஓர் அரசருக்கு ஆடை வழங்கிய செய்தியை சிறுபானாற்றுப்படை, “நீலநாகன் நல்கிய கலிங்கம்" என்று குறிப்பிடுகின்றது.

அதாவது “நீலன் எனும் நாகர் இனத்தில் தோன்றிய திருமங்கை ஆழ்வார் அளித்த ஆடை” என்பது அதன் பொருளாகும்.
மணிமேகலையில் பிலிவளை என்ற நாக கன்னிகை சோழ மன்னன் கிள்ளியை மணம் புரிந்ததாக குற்ப்பு உள்ளது.

ஸ்ரீ ராவணரின் மகனான இந்திரஜித்தன் என்னும் மேகநாதன் நாகர் இன இளவரசியை மணந்துள்ளார். ஆனால் இந்திரஜித்தன் நாகர் அல்லர், அவர் மூதாதையரான புலத்தியர் சிங்களர் என்று போகர் தன் நூலான ஏழாயிரத்தில் பதிவு செய்கிறார் அதேபோல் மஹாபாரதத்தில் அர்ச்சுனன் நாகலோகம் சென்று அங்கு உலூபி என்ற நாக கண்ணிகையை மணந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.  அர்ச்சுனன் நுழைந்த இடத்தை இப்போது ஒரு பூமி உருண்டையை துலையிட்டு பார்த்தால் எதிர்புறத்தில் மெக்ஸிகோ நகரம் வரும்.

இந்த அமெரிக்காவில்  தற்போது மிக பழமையான கருங்கற்களால் கோட்டை போல கட்டபட்ட மிகப்பெரிய  “மேரு” அல்லது “ஸ்ரீ சக்கரம்” அல்லது “நாற்பது முக்கோனம்” ஒரு பறந்த வயல்வெளிகளில் கண்டுபிடிக்க பட்டது. இந்த மேரு என்ற ஸ்ரி சக்கர தத்துவமே நவ சித்தர்கள் முதல் பின்பற்றபட்டதாகவும் மற்றும் அதுவே தம் மார்கமாகவும் திருவள்ளுவர் தம் ஞானவெட்டியான் நூலில் பதிவு செய்துள்ளார்.

நம் மூதாதையரான முதல் சித்தன் சாம்ப சிவன்.

Comments

Popular posts from this blog

Pottri Thiru Agaval (போற்றி திரு அகவல்)

இந்தி எதிர்ப்பு முதல் களபலி போராளி நடராசன்

பழனி முருகனுக்கு எழுதப்பட்ட சிவகுலத்தோர் செப்பேடு.