உரிமைகாக்க போரிட்ட உத்தமர் அங்கம்பாக்கம் குப்புசாமியார்....!
உரிமைகாக்க போரிட்ட உத்தமர் அங்கம்பாக்கம் குப்புசாமியார்....!
"""""""""""""""""""""""""""""
காஞ்சீவரத்திற்கு அருகேயுள்ள அங்கம்பாக்கம் எனும் கிராமத்தில்
பிறந்தவர் #குப்புசாமி.
பரையர் வகுப்பைச் சேர்ந்த இவர்
ஆங்கிலேயரின் ராணுவத்தில் பட்டாலியனாக சேர்ந்து அவுல்தாராகப் பணியாற்றியவர்.
பணிமுடிந்து சொந்தக் கிராமத்திற்கு திரும்பி வந்து தன் சமூக மக்களுக்கான முன்னேற்றப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார்.
#பண்டிதர்_அயோத்திதாசர் வழியில்
#புத்த_தம்ம நெறியை தனது வாழ்வின் நெறியாக ஏற்று
பண்டிதர் அயோத்திதாசர் துவக்கிய தென்னிந்திய சாக்கிய மகா சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தம்ம பணியாற்றினார்.
கல்வி வளர்சிக்காக கல்வி
அபிவிருத்திச் சங்கம் ஒன்றைத் தொடங்கி அங்கம்பாக்கத்தில் பாடசாலைகளை ஏற்படுத்தினார். குப்புசாமி தனக்கிருந்த சமூக தொடர்புகள் மூலம் நிதிதிரட்டிப் பள்ளிக்கெனக் கட்டடங்கள்,கருவிகள், ஆசிரியர்களுக்கான ஊதியம் போன்றவற்றை வழங்கிவந்தார்.
ஆங்கிலேய அதிகாரிகளோடு தொடர்புகொண்டு கூட்டுறவுச் சங்கம் மூலமாகத் விவசாயக் கூலிகளுக்குப் பண உதவி கிடைக்கச் செய்து புறம்போக்கு நிலப்பகுதிகளை வாங்கி விவசாயம் செய்ய உதவினார்.
குப்புசாமியின் சமூக மேம்பாட்டு முயற்சிகளால் அங்கிருந்த நிலவுடமை சாதிஇந்துக்கள் வெறுப்பும் கோபமும் அடைந்தனர்.குப்புசாமியை தாக்குவதென முடிவெடுத்து தாக்க வந்தனர்.
1928ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் நாள் அங்கம்பாக்கம் சேரிக்குள் அதிகாலை ஒரு கும்பல் நுழைந்தது.
வெறும் 60 குடிசைகளைக் கொண்டிருந்த சேரி மக்களளை எதிர்த்து 150 வீடுகளைக் கொண்டிருந்த சாதிஇந்துக்கள் வன்முறை செய்தனர்.70க்கும் மேற்பட்டவர்களைக் கொண்டிருந்த அக்கும்பல் அங்கிருந்த மக்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கினர். அங்கிருந்த மக்களும் தங்களை தற்காத்துக்கொள்ள எதிர்தக்குதல் நடத்தினர்.
கும்பல் குப்புசாமி வீட்டை நோக்கி முன்னேறியது.அந்த வீட்டின் வெளிப்புறக்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய முயன்றது.
அப்போது வெளியூரிலிருந்து ஊர் திரும்பிக்கொண்டிருந்த குப்புசாமி தன் மக்களின் நிலைமையை அறிந்ததோடு அந்த கும்பல் தன் வீட்டையும் தனது குடும்பத்தாரையும் தாக்க முயற்சி செய்வதை புரிந்து கொண்டு மிகவும் வேகமாக தன் குடும்பத்தை காக்க தனது வீட்டுக்குள் சென்றார்.
வெளியே மிகப்பயங்கர ஆயுதங்களோடு இருந்த கும்பலிடம் இருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காக்கா வீட்டின் உள்புறம் தாழிட்டுக்கொண்டார்.
கும்பல் அவர்களை விடுவதாக இல்லை.மிகவும் கொடூரமான தாக்குதலை நடத்தி ஒட்டு மொத்த குடும்பத்தையும் அழிக்க முயன்றனர்.
குப்புசாமி கூட்டத்தை கலைக்கும் நோக்கில் துப்பாக்கி எடுத்து விண்ணை நோக்கி சுட்டார்.ஆனால் கும்பல் கலைவதாக இல்லை.கும்பல் கொலை வெறியுடன் வைக்கோலை தீமூட்டி வீட்டை எரித்துக்கொண்டு இருந்தது.
வேறு வழியில்லாமல் தாத்தா கும்பலை நோக்கி சுட ஆரம்பித்தார்.இந்த எதிர் தாக்குதலில் 15 பேர் காயமடைந்தனர்.
9 பேர் படுகாயமுற்றனர்.#ஐந்து பேர்
உயிர் இழந்தனர்.கூட்டம் கலைந்தது.
இந்த தாக்குதலும் எதிர் தாக்குதலும் தொடர்ந்து நடந்தது.இந்த சம்பவம் காலை ஆறு மணிக்குத்தான் முடிவுக்கு வந்தது.
கலவரம் முடிந்து கலவரத்தில் ஐந்து உயிர் போய்விட்டதை கண்டு குப்புசாமி வேதனைப்பட்டார்.புத்த தம்மத்தை ஏற்று பஞ்ச சீலத்தை கடை பிடிக்கும் நான் இப்படி ஒரு செயலை செய்து விட்டேனே என்று வருந்தினார்.
சட்டப்படி என்ன தண்டனையோ அதை நான் பெற வேண்டும் என்று குடும்பத்தினரிடமும் தனது சகாக்களிடமும் சொல்லி வருந்தினார்.
சென்னைப் போலீஸ் கமிஷ்னருக்கும் கலெக்டருக்கும் தந்தி அனுப்பினார். போலீசார் வந்தபின்பு குப்புசாமி அவர்களிடம் துப்பாக்கியை ஒப்படைத்தார்.
அவரோடு சேர்த்து ஏழுபேர் கைதுசெய்யப்பட்டனர்.
குப்புசாமி கைதுசெய்யப்பட்ட பின் சாதிஇந்துக்கள் பதினெட்டுப்பேர் கைதுசெய்யப்பட்டனர்.
வழக்கு நடந்தது,
மற்றவர்களுக்குப் பல்வேறு பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்கப்பட்டாலும் ஐந்து கொலைகளுக்குக் காரணமானவர் என்ற முறையில் குப்புசாமிக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
இத்தீர்ப்பு பறையர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை உண்டு செய்தது. வழக்கு நடந்து கொண்டு இருந்த கால கட்டத்தில் தொடக்கம் முதல் இறுதி வரை வழக்கை பற்றிய விவரங்களை குப்புசாமி தரப்பு நியாங்களையும் விலாவாரியாக தமிழன் நாளிதழ் மூலம் சமூக மகளுக்கு எடுத்துரைத்துவந்தனர்.
இதனால் கோலார் தங்கவயல் தமிழன் இதழ் தன் வாசகர்களுக்கு மத்தியில் இந்த வழக்கு பற்றிய தெளிவான புரிதல் இருந்தது.அன்றைக்கு இருந் சமூக விழிப்புணர்வும் அரசியல் எழுச்சியும் இந்த வழக்கைப்பற்றிய பெரும் விவாதத்தை உண்டு செய்தது.
இந்த தீர்ப்பை நாம் ஏற்க கூடாது, வழக்கை நாம் எதிர் கொள்ளவேண்டும் என்றும் மேல் கோர்ட்டில் அப்பீல் செய்ய வேண்டும் என்றும் முடிவெடுத்தனர்.
அங்கம்பாக்கம் துக்க நிவாரணச் சங்கம் ஒன்று வி.பி.எஸ். மணி அவர்கள் தலைமையில் தொடங்கப்பட்டது. இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யும் நோக்கில் நிதி திரட்டப்பட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
வழக்கை எதிர் கொள்வது எப்படி என்று தமிழன் இதழில் (20.3.1929 நீண்டதொரு அறிக்கை வெளியானது.
பேரறிஞர் ஜி.அப்பாதுரை,
எம்.சி.ராஜா,
சுவாமி சகஜானந்தர்,
தியாகி வி.ஜ.முனுசாமி பிள்ளை
தளபதி வீரையன் உள்ளிட்ட பலர் இவ்வழக்கிற்கென நிதியுதவியும் பங்களிப்பும் செலுத்தினர்.
வழக்கு சைதாப்பேட்டை நீதி மன்றத்திலிருந்து உயர்நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது.வழக்கு விசாரணைக்கு வந்தபோதெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டனர். வழக்கின் நிலைமை குறித்து அவ்வப்போது துண்டுப்பிரசுரங்கள் மூலம் தகவல்கள் பரப்பப்பட்டன.
குப்புசாமி சார்பாக வழக்கறிஞர் வி.எல்.எத்திராஜ் திறமையாக வாதாடினார்.வழக்கின் முடிவில் 1929 மே மாதம் 23ஆம் தேதி குப்புசாமி முற்றிலுமாக விடுவிக்கப்பட்டார்.
அவருக்காகத் திரட்டப்பட்ட நிதியின் செலவினம் குறித்து அங்கம்பாக்கம் துன்ப நிவாரண சங்கத்தின் வரவு சிலவு கணக்கு புத்தகம் என்ற பெயரில் 12.7.1929ஆம் தேதியிட்டுச் சிறுநூல் வெளியிடப்பட்டிருக்கிறது.
- ✒அன்பு பொன்னோவியம்
#பரையர்வரலாற்றுமாதம்
Comments