தில்லையாடி வள்ளியம்மை பர நாச்சியார்

 தில்லையாடி வள்ளியம்மை

""""""""""""'"""""""""""" """"""""""""""""""""""""

அன்னை தில்லையாடி வள்ளியம்மை பரையர் குடும்பத்தில்

மயிலாடுதுறை மாவட்டம் அருகே தில்லையாடி என்னும் கிராமத்தில்   முனுசாமி – மங்களத்தம்மாள்  பெற்றோருக்கு 1898ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் நாள் பிறந்தார்.


அன்னை தில்லையாடி வள்ளியம்மையின் குடும்பம் பிழைப்பிற்காக தென்னாப்பிக்காவிற்கு புலம் பெயர்ந்தார்கள்.


1913ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் கிறித்தவ முறைப்படி மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் என்ற புதிய விதியைப் பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டு வந்தது. இதனை எதிர்த்து ஜோகன்ஸ்பர்க் நகரில் மிகப்பெரிய அளவில் அகிம்சை ஊர்வலத்தை நடத்தினார் அண்ணல் காந்தியடிகள்


அப்போது அந்த ஊர்வலத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக இந்தத் தாளில் இருக்கும் வாசகங்களை யார் படிக்கிறீர்கள் என்று மகாத்மா காந்தியடிகள் கேட்ட போது பதினைந்து வயதே நிரம்பிய தில்லையாடி வள்ளியம்மை முன்வந்து ‘வெள்ளை ஏகாதிபத்தியத்தின் விலங்கொடிப்போம் வாருங்கள்’ என்று முழக்கமிட அகிம்சை ஊர்வலம் நகரத் தொடங்கியது.


மாபெரும் மக்கள் ஊர்வலத்துடன் 56 நாட்கள் அகிம்சை முறையில் நடைபெற்ற பேரணியில் முன்னிலை வகித்துச் சென்ற மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொல்ல அந்த நாட்டின் காவல்துறையினர் மகாத்மா காந்தியை நோக்கித் துப்பாக்கியுடன் வந்த போது மகாத்மாவின் முன் நின்று, ‘என்னை வீழ்த்தி விட்டு காந்தியடிகளைச் சுடு’ என்று மன வலிமையுடன் நின்று மகாத்மாவைக் காப்பாற்றினார் வள்ளியம்மை. இதனை மகாத்மா காந்தியடிகள் தனது சுயசரிதை நூலில் வியப்புடன் கூறியுள்ளார்.


அன்னை சத்தியவாணி முத்து அவர்கள் காந்தியடிகளை நோக்கி சுடப்பட்ட குண்டை தன் நெஞ்சில் தாங்கி காந்தியை காப்பாற்றியவர் தில்லையாடி வள்ளியம்மை என்று தன்னுடைய எனது போராட்டம் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.


ஆனால் நாம் கேள்விப் பட்ட வரலாறோ அவர் காந்தியடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையிலடைக்கப் பட்டதால் நோய்வாய்ப் பட்டார் என்று பரப்பப் பட்டதையே தான்.


தென்னாப்பிரிக்காவின் போராட்டத்தில் உங்கள் நாடு எது என்ற போது எங்கள் நாடு இந்தியா என்றும் எங்கள் கொடி இதுதான் என்றும் தனது ஆடையை கிழித்து கொடியை உருவாக்கி காட்டினார் என்கிறார்கள்.


இந்த வரலாற்றை எல்லாம் ஏன் நமக்கு தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.


அன்னை தில்லையாடி வள்ளியம்மையின் சொந்த ஊருக்கு சென்ற காந்தியடிகள் அங்குள்ள அவரின் சுற்றத்தார் நிலை கண்டு அரிசன மக்களின் முன்னேற்றத்திற்காக அரிசன சேவா சங்கத்தை நிறுவினார்.


தன்னுடைய பிறந்த நாளன்று இறந்தவருள் அன்னை தில்லையாடி வள்ளியம்மையும் ஒருவர்.


( தில்லையாடி வள்ளியம்மையை முதலியார் என்கிற அடிப்படையில் செங்குந்தர்கள் உரிமை பாராட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அன்னை வள்ளியம்மை பரையர் குடியைச் சார்ந்தவராவார்)



Comments

Popular posts from this blog

Pottri Thiru Agaval (போற்றி திரு அகவல்)

இந்தி எதிர்ப்பு முதல் களபலி போராளி நடராசன்

பழனி முருகனுக்கு எழுதப்பட்ட சிவகுலத்தோர் செப்பேடு.