நந்தனும் - சிதம்பர இரகசியமும்

 வேதாந்த சனாதன மதம் கூறும் நந்தன் கதை கட்டுக்கதை என்பதை நிறுவும் சான்றுகள். தமிழ் பக்தி இலக்கியங்களில் நந்தன் பற்றிய குறிப்பும் கல்வெட்டாதாரங்களும். 





கல்வெட்டு காலம் - 8ம் நூற்றாண்டு (படம் -1) 


செய்தி: கி. பி 8ம் நூற்றாண்டு புறமலைநாட்டை ஆண்ட அரசன் ஒரு புலையன். 


சுந்தரர் காலம் - 8ம் நூற்றாண்டு

நூல் - திருத்தொண்டர் புராணம்.


நந்தனார் பற்றிய குறிப்பு - சிவன், திருமால், முருகன் என மூவரை குறிப்பதோடு நான்காவதாக "செம்மைத் திருநாளைப்போவார்" என புலையனான நந்தனை குறிப்பிடுகிறார். 


நம்பியாண்டார் நம்பி - காலம் 10ம் நூற்றாண்டு. 


நூல்: திருத்தொண்டர் திருவந்தாதி


நந்தனார் பற்றிய குறிப்பு : நந்தன் என்பவர் புலையன் அவரது ஊர் ஆதனூர். 


நந்தனை பற்றிய ஆரிய கட்டுக்கதை இடம் பெற்ற நூல் - பெரியபுராணம். 

ஆசிரியர் - சேக்கிழார். 


காலம் - 12ம் நூற்றாண்டு. 


தெளிவு - புலையன் அரசனாக இருந்த கல்வெட்டு சான்று. மற்றும் சுந்தரரின் கூற்றுக்கு 400 ஆண்டுகள் பிந்தைய பெரிய புராணம் கூறுவதை பிடித்து தொங்குவது அறிவிலித்தனம். 


தில்லை கோவிலுக்கு 1000 ஆண்டுகள் பழமையான திருவாரூர் தியாகராசர் கோவிலில் முதன் மரியாதை பெறுவது பறையர். 


தில்லை பொன்னம்பலநாதனுக்கு நடராசன் என பெயர் வவைத்தே "நந்தன்" தான் அப்படியிருக்க அவனை கோவிலுக்குள் நுழைய விடவில்லை யென்பது உண்மையா? 


ஆனால் பறையர்களுக்கும் சிதம்பர இரகசியத்திற்கும் தொடர்பு உள்ளது என்பது மட்டும் உறுதி

Comments

Popular posts from this blog

Pottri Thiru Agaval (போற்றி திரு அகவல்)

இந்தி எதிர்ப்பு முதல் களபலி போராளி நடராசன்

பழனி முருகனுக்கு எழுதப்பட்ட சிவகுலத்தோர் செப்பேடு.